மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இதர மாநிலங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயமாகும். ஆன்லைன் நடைமுறை என்றாலும் அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் நாள்தோறும் இ-பாஸ் பெற்று செல்வது மிகுந்த சிரமமாக இருந்தது.
இதுதொடர்பாக தொழிலாளர்கள் தரப்பிலும் ஆலை நிர்வாகங்கள் தரப்பிலும் தமிழக அரசிடம் முறையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்த உத்தரவில், “ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வர தொழிலாளர்களுக்கு மாதாந்திர இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸை பெற அந்தந்த ஆலை நிர்வாகங்களே விண்ணப்பிக்கலாம். தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தினசரி செல்ல வேண்டிய தொழிலாளர்களுக்கான மாதாந்திர இ-பாஸ்களை ஆட்சியர்கள் வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.