நம்பர் 1 நடிகை நயன்தாரா – ஆர்மாக்ஸ் மீடியா கணிப்பு

தமிழகத்தின் பிரபலமான நடிகையாக நயன்தாரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்மாக்ஸ் மீடியா தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை குறித்து கருத்து கணிப்பு நடத்தி தனது முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.


ஆர்மாக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகை நயன்தாரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். திரிஷா கிருஷ்ணன் 2-வது இடத்தையும் தமன்னா 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.


நடிகைகள் ஜோதிகா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி, காஜல் அகர்வால், சிம்ரன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *