மகளுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த தாய் #suicide

சென்னை கீழ்கட்டளை காமராஜர் நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (81). இவரின் மகள் பிரபாவதி. இவரின் மகள் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் குடியிருந்தனர்.
பிரபாவதியின் கணவர் கோவிந்தசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த சோகத்தில் பிரபாவதி இருந்தார். தந்தை செல்வராஜ்தான் குடும்பச் செலவுகளை கவனித்து வந்தார். மகளையும் பேத்தியையும் அடிக்கடி சந்தித்து வந்த செல்வராஜ், வழக்கம் போல கடந்த 29-ம் தேதி பிரபாவதி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு பூட்டப்பட்டுள்ளது. வெளியில் எங்காவது சென்று இருப்பார்கள் எனக்கருதிய செல்வராஜ் திரும்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் அன்றைய தினம் மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் கதவு பூட்டப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்களுக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. இதையடுத்து செல்வராஜ், ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது ஒரே சேலையில் தாயும் மகளும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர். அதைப்பார்த்து செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றினர். போலீஸாரின் விசாரணையில் கணவர் இறந்த சோகம், வயதான அப்பாவுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று கருதி பிரபாவதி இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *