தாய் மொழியில் பொறியியல் கல்வி கற்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“தாய் மொழியில் தொழில் கல்விக்கான பாடத்திட்டம் வகுக்கப்படும் என்று புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். போட்டித் தேர்வுகளுக்காக சிறப்பு பாடத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது” என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.