நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள்

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கடந்த வியாழக்கிழமை வழக்கை விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

“நெல் கொள்முதலுக்கான 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3,34,000 டன் நெல்லை பாதுகாக்க முடியும். விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *