சென்னையில் பறக்கும் ரயில் திட்டப் பணி வேகமெடுத்துள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
தற்போது இந்தப் பணி வேகம் எடுத்துள்ளது. ஆதரம்பாக்கம் வாணுவம்பேட்டை ரயில் நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.