ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் தேநீர் விற்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் குவளைகளுக்குப் பதிலாக மண் குவளையில் தேநீர் விற்பனை செய்யப்படும். முதல்கட்டமாக 400 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிளாஸ்டிக் இல்லாத நாடாக இந்தியா உருவாக்கப்படும்” என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.