மகாராஷ்டிராவில் பேய் காற்று..அடைமழை..மும்பை மூழ்கியது…

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநில தலைநகர் மும்பையில் 100 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசுகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 215 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.


மும்பையில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிஎஸ்எம்டி ரயில் நிலையம் மற்றும் சாந்ரஸ்ட் சாலை ரயில் நிலையங்கலுக்கு இடையே சென்று கொண்டிருந்த புறநகர் ரயில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்த 290 பேர் ரயிலில் இருந்து கீழே இறங்க முடியாமல் பரிதவித்தனர்.

மும்பையில் பேய் காற்றால் செல்போன் கோபுரம் முறிந்து விழுந்துள்ளது.
மும்பையில் பேய் காற்றால் செல்போன் கோபுரம் முறிந்து விழுந்துள்ளது.


இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகளில் சென்று ரயிலில் சிக்கியிருந்த 290 பேரையும் பத்திரமாக மீட்டனர். மும்பையில் உள்ள டி.ஓய்.படேல் மைதானம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது.
பேய்க்காற்றால் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள், சாலையோர டிராபிக் சிக்னல் கம்பங்கள் சாலையில் முறிந்து விழுந்துள்ளன.

மும்பையில் சாலையில் முறிந்துவிழுந்த மரம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.
மும்பையில் சாலையில் முறிந்துவிழுந்த மரம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.

ஏராளமான மரங்களும் சாய்ந்துள்ளன. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மைதானங்கள், பொது அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரயில் பயணிகளை மீட்க ரப்பர் படகுகளில் செல்லும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்.
ரயில் பயணிகளை மீட்க ரப்பர் படகுகளில் செல்லும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்.


மகாராஷ்டிரா ஏற்கெனவே கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கிறது. அதோடு வருண பகவானும் அந்த மாநிலத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
மும்மையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் வடமேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மும்பை சாலையில் பெருக்கெடுத்து பாயும் வெள்ளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *