கள்ளக் காதலியுடன் காரில் சென்ற கணவரை வழிமறித்து ருத்ர தாண்டவமாடிய மனைவி – வைரலாக பரவும் வீடியோ

தெற்கு மும்பையில் அமைந்துள்ள பெட்டர் சாலை பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். கடந்த சனிக்கிழமை மாலை இந்த சாலையில் ரூ.80 லட்சம் மதிப்புடைய கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் ஆடாமல், அசையாமல் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்தது.


அந்த காரில் இருந்து ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்த பெண் இறங்கினார். ரேஞ்ச் ரோவர் காருக்கு முன்னால் நின்று கொண்டு அந்த கார் நகரவிடாமல் வழிமறித்தார். காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த நபரை வெளியே இழுக்க முயன்றார். காரின் பேனட் மீது ஏறி கூச்சலிட்டார். அந்த பெண்ணின் ருத்ர தாண்டவத்தால் போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்தது.


பின்னால் வந்த கார்கள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்தன. போக்குவரத்து போலீஸார் தலையிட்டு ரேஞ்ச் ரோவர் காரையும், வெள்ளை நிற காரையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.


இதுகுறித்து மும்பை போக்குவரத்து போலீஸார் கூறும்போது,, “ரேஞ்ச் ரோவர் காரில் 30 மதிக்கத்தக்க ஒரு ஆணும், அழகான ஒரு பெண்ணும் இருந்தனர். வெள்ளை நிற காரில் வந்த பெண், ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த ஆணின் மனைவி ஆவார்.


கணவர் மீதான சந்தேகத்தின்பேரில் அந்த பெண், காரை வழிமறித்து கணவரையும் உடன் இருந்த பெண்ணையும் தாக்க முயன்றார். போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்துவிட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். போக்குவரத்துக்கு இடையூறு செய்த குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை” என்று தெரிவித்தனர்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *