பாசக்கார தம்பியால் அக்காளுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சையத் உமர். இவரின் மனைவி ஆயிஷா (39). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆயிஷாவாகிய நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2003-ம் ஆண்டு சையத் உமர் என்பவருடன் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர்.

எனது அப்பா சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். என் அம்மா பெயர் விக்டோரியா, சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வருகிறார். எனது உறவினர்கள் மாங்காடு பத்ரிமேடு பகுதியில் வசித்து வருகின்றனர். நான் காடுவெட்டி பச்சையம்மன் கோயில் அருகே டெய்லர் கடை நடத்தி வருகிறேன். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். எனது இரண்டாவது தம்பி பெயர் ரியாஸ். அவனுக்கு 32 வயது ஆகிறது. அவனுக்கு திருமணமாகிடி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து ரியாஸ், தனியாக மாங்காடு பகுதியில் வசித்து வருகிறான். எனது தம்பிக்கு நான்தான் எல்லாம் பார்த்து வருகிறேன். இந்தநிலையில் கடந்த 18.1.2022-ம் தேதி இரவு 7 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ஆவடி அந்தோணியார் சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தேன். ஆர்டிஓ அலுவலகம் அருகே இருட்டாக இருக்கும்.

அந்த இடத்தில் வரும்போது எனது தம்பி ரியாஸ். அவனது ஆட்டோவில் காத்திருந்தான். நான் அவனைப் பார்த்துவிட்டு பார்க்காதது போல சென்றேன். அப்போது என் தம்பி ரியாஸ், என்னை வழிமறித்து உன்னிடம் பேச வேண்டும் என்று கூறினான். அவன் கஞ்சா அடித்திருந்ததால் நான் வீட்டுக்கு வா பேசி கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் அவன் நான் பேசணும் சொன்னா நிக்க மாட்டியா என்று கூறி எனது ஸ்கூட்டி பைக்கை கோபத்தில் காலால் எட்டி உதைத்தான்

பின்னர் அவன் என் ஆர் சி புக்கை வாங்கி தரமாட்டியா என்று கூறியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டினான். நான் அதை தடுத்தபோது தாடை கழுத்து மற்றும் இடது கை விரலில் வெட்டு விழுந்தது. உடனே நான் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு எனது தம்பி என்னுடைய பேக், செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். பின்னர் எனது சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் என்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறியுள்ளார். ஆயிஷா அளித்த தகவலின்படி ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் இந்திய தண்டனைச் சட்டம், 295 பி, 341, 307 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ரியாஷை தேடிவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *