தேசிய தலைவர் படத்தில் ஜெ.எம்.பஷீர் – சிறப்பு பேட்டி

முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை தேசிய தலைவர்' என்ற பெயரில் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் நவரசநாயகன் கார்த்திக், இளைய திலகம் பிரபு, எஸ்.எஸ்.ஆர்.கண்ணன். சங்கிலி முருகன், ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன், ஜெ.எம்.பஷீர் உள்பட முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கவுள்ளனர். படத்தை சௌத்ரி, ஜெ.எம்.பஷீர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதில் முத்துராமலிங்க தேவராக நடிகர் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். தமிழ் நிருபர் டாட் காமிற்கு ஜெ.எம்.பஷீர் அளித்த சிறப்பு பேட்டி:

தேசிய தலைவர் படத்தின் சிறப்பு என்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று புத்தமானமுடிசூடா மன்னன் பசும்பொன் தேவர்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. தேவருடன் தொடர்புடையவர்கள் கதைக்குழுவில் உள்ளனர். நேதாஜியாக சரத்குமாரை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை தத்ரூபமாக எடுக்க முடிவுசெய்துள்ளோம். தேவர் அய்யா படம் என்பதால் விரதம் இருந்து இந்தப் படத்தில் நடிக்கவுள்ளேன்.


நீங்கள் முத்துராமலிங்க தேவராக நடிப்பதற்கு ஏதாவது சிறப்பு காரணம் உண்டா?


தேவர் ஜெயந்தியில் நான் பங்கேற்கும் போது என்னை அறியாத உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. அதை என்னுடைய நண்பர் சௌத்ரியிடம் கூறியபோது நீங்களே தேவராக நடியுங்கள் என்று கூறினார். அதன்பிறகு மேக்அப் போட்டப்பிறகு தேவரின் கெட்டஅப் அப்படியே பொருந்தியிருப்பதாக படக்குழுவினர் கூறி எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். படத்தின் ஃபஸ்ட் லுக்கைப் பார்த்தால் நடராஜன் சார் சொன்னது உண்மையென தெரிந்தது. மேலும் அய்யா மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அதனால்தான் தேசிய தலைவர் படத்தில் நடிக்கிறேன்.


படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது?


கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும். கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜ். இநதப் படத்தை இயக்கவுள்ளார். இதர நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு நடந்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *