அன்று நெல்லை இருட்டுக்கடை இன்று மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி உரிமையாளர்

நெல்லையில் இருட்டுக்கடை அல்வா எப்படி பேமஸோ, அதைப்போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் ஓர பஜ்ஜி கடை மிகவும் பிரபலம்.

நெல்லையில், நெல்லையப்பர் கோயிலின் எதிரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் தலைமுறை தலைமுறையாக அல்வா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கடையை ஹரிசிங் என்பவர் தற்போது கவனித்து வருகிறார்.

இருட்டுக் கடை உரிமையாளர்

கடைக்கு குறிப்பிடும் வகையில் பெயர் கிடையாது. ஆனால் குறைந்த வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் இருந்ததால் இருட்டுக் கடை அல்வா என வாடிக்கையாளர்களே பெயர் வைத்தனர். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இந்தச் சூழலில் இருட்டுக்கடை அல்வா பெயருக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நீதிமன்றம் வரை சென்று போராடி அந்தப் பெயரை தக்க வைத்துக் கொண்டவர் ஹரிசிங்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஹரிசிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியானது. வயது முதுமை காரணமாக ஹரிசிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜன்னல் பஜ்ஜி கடை


நெல்லையப்பர் கோயிலைப் போல சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜன்னல் ஓர பஜ்ஜி கடை பிரபலம். இந்தக் கடை பொன்னம்பல வாத்தியார் தெருவில் செயல்பட்டு வந்தது. கடைக்கு அடையாளமே ஜன்னல் ஓரத்திலிருந்து உரிமையாளர் ரமேஷ் என்கிற சிவராமகிருஷ்ணன் (58) சுடச் சுட பஜ்ஜிகளை விற்பனை செய்வதுதான்.


இந்தக் கடையில் பஜ்ஜிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சிரித்த முகத்தோடு ரமேஷும் அவரின் சகோதரர் சந்திரசேகரும் பஜ்ஜிகளை விற்பனை செய்யும் அழகே தனி.

மயிலாப்பூர் ஜன்னல் ஓர பஜ்ஜி கடை

சாம்பார், சட்னி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட வருபவர்களில் பலருக்கு இந்தக் கடையில் பஜ்ஜி ருசி கண்டிப்பாக தெரியும். அந்தளவுக்கு நெல்லை இருட்டுக்கடை அல்வாவைப் போல மயிலாப்பூர் ஜன்னல் ஓர பஜ்ஜிக்கடை பெரும் புகழ் பெற்றிருந்தது.


பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி என வகை வகையான பஜ்ஜிகளுக்கு சுவை கூட்டும் வகையில் சாம்பாரும் சட்டினியும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதினாலும் கடையை ரமேஷ்,, சந்திரசேகர் விரிவுபடுத்தவில்லை. அதே பழைய செட்டப்பிலான ஜன்னல் கம்பிகளுக்கு நடுவிலேயே விற்பனை நடந்து வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தக் கடை அங்கு செயல்பட்டு வந்தது.

பஜ்ஜி கடை மூடல்


எப்படி நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாரோ அதைப்போல ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் பஜ்ஜி கடை பூட்டப்பட்டது. பக்கத்து கடைகளில் விசாரித்த வாடிக்கையாளர்களுக்கு ரமேஷ் உயிரிழந்தது பேரதிர்ச்சியாக உள்ளது.


ரமேஷின் சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அந்தப் பணியோடுதான் பஜ்ஜி கடையில் ரமேஷிக்கு உதவியாக இருந்து வந்தார். ரமேஷ் மரணம் எங்களுக்கு ஈடுகட்ட முடியாது. ஒரு மாதத்துக்குப் பிறகு பஜ்ஜி கடையை திறக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *