சென்னை மயிலாப்பூரில் நகைக்கடை காவலாளியை தாக்கி கொள்ளை -சிசிடிவி கேமராவில் சிக்கிய கொடூரர்கள்

சென்னை மயிலாப்பூரில் நகைக் கடையின் காவலாளியான முதியவர் திருநாவுக்கரசரை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தை திருடிச் சென்றனர்.


பிறகு அங்கே சாலையோரமாக படுத்திருந்த பிச்சைக்காரர்கள் கன்னியம்மாள், சங்கரன் ஆகியோரையும் அடையாளம் தெரியாத 2 பேர் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ. 150 பணத்தை பறித்து சென்று விட்டனர். காயமடைந்த 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள், காவலாளி திருநாவுக்கரசுவை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.


அவர்கள் யார், பழைய குற்றவாளிகளா, புதிய குற்றவாளிகளா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *