பெங்களூரை சேர்ந்த இளைஞர் சுரேஷ் (வயது 26). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாட்ஸ் அப்பில் நிஷா என்ற பெண்ணுடன் அறிமுகமானார். அந்த பெண், கேரளாவில் உள்ள கால் சென்டரில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இருவரும் வாட்ஸ்அப்பில் இரவும் பகலும் சேட்டிங் செய்தனர். பரஸ்பரம் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்துள்ளனர்.
சில வாரம் பேசிய அந்த பெண், உங்களை ஆடையில்லாமல் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சுரேஷிடம் கூறியிருக்கிறார். கூச்ச சுபாவம் கொண்ட சுரேஷ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
நீங்கள் ஆடைகளை களைந்தால் நானும் அவ்வாறு ஆடைகளின்றி உங்களோடு வீடியோ காலில் பேசுவேன் என்று அந்த பெண் கூறியிருக்கிறார். சபலத்தில் விழுந்த சுரேஷ், வீடியோ காலில் ஒட்டுத் துணியில்லாமல் அந்த பெண்ணுடன் பேசியிருக்கிறார்.
அவர் பேசி முடித்ததும் வீடியோ கால் துண்டிக்கப்பட்டது. சுரேஷ் முயற்சித்தபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷுன் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், உன்னுடைய நிர்வாண புகைப்படம், வீடியோ என்னிடம் இருக்கிறது. ரூ.50 ஆயிரம் கொடுக்காவிட்டால் அந்த படம், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
பணத்தை கொடுத்தாலும் மிரட்டல்கள் ஓயாது என்பதை உணர்ந்த சுரேஷ், பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேஷை மயக்கிய மர்ம பெண் நிஷாவை தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.