
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி ஆய்வு மையத்தில் 5 நாடுகளையும் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி விண்வெளி ஆய்வு மையத்துக்கு வீரர்கள் செல்வதும் பூமிக்கு திரும்புவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாப் பென்கென், டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றனர்.
இருவரும் இந்திய நேரப்படி நேற்று மாலை ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் பூமிக்கு புறப்பட்டனர். மெக்ஸிகோ வளைகுடா அல்லது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இன்று பிற்பகலில் இருவரும் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருவீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளி ஓடத்தில் புறப்படும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.