தேசிய நல்லாசிரியர் விருது.. 2 தமிழக ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது -க்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியராகப் பணியாற்றி ஜனாதிபதியாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

சத்தியமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் திலிப்
சத்தியமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் திலிப்

ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநிலங்களை சேர்ந்த சிறந்த ஆசிரியர்களின் பெயர்களை மத்திய கல்வித் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.

இவற்றை ஆய்வு செய்து நல்லாசிரியர்களை மத்திய கல்வித் துறை தேர்வு செய்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 45 ஆசிரியர்களை, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மத்திய கல்வித் துறை தேர்வு செய்துள்ளது.

சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சரஸ்வதி
சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சரஸ்வதி

மேலும் சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 2 ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 47 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆசி பெற்று குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆசி பெற்று குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

புதுச்சேரியில் ஒருவர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளார். புதுச்சேரி காட்டேரி குப்பத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் செல்வமுத்துராமன் ராஜ்குமாருக்கும் விருது கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் 2 பேர், ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் தலா ஒருவர், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் 47 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழாவில் பங்கேற்று தேசிய நல்லாசிரியர் விருதுகளை தனது கைகளால் வழங்குவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *