நீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் நுழைவுத் தேர்வை எழுதினர்.
அந்த தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைக் குறிப்புகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
www.ntaneet.nic.in என்ற இணையத்தில் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வை எழுதியவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நீட் தேர்வு முடிவு வரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.