சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு தரப்பில் இலவசமாக நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நீட் பயிற்சி வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கடந்த வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். 

இன்னர் வீல் டிஸ்டிரிட் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் 100 நாட்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 101 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *