ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் தேர்வு

ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதி, வயது, இடஒதுக்கீடு, இருக்கை விவரம், தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *