அக். 12-ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவு

அக். 12-ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. 

நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

நீட் தேர்வுக்கான விடைக் குறிப்புகளை கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வரும் 12-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் கட் ஆப் மதிப்பெண் உயரக்கூடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *