நீட் தேர்வு முடிவு அக். 16-ல் வெளியாகும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வரும் 16-ம் தேதி வெளியிடும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.