நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. இதில் ஒடிஷாவின் சோயிப் அஃப்டாப் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ntaneet.nic.in இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.