மடிக்கணினியில் நீட் பாட வீடியோக்களை பதிவேற்றம் செய்து வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழக மாநில பாடத் திட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினியில் அனைத்து பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டுல்ளன.
மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு பாட வீடியோக்களையும் மடிக்கணினியில் பதிவேற்றும் செய்து வழங்க கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டு பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் வரும் நவ. 1-ம் தேதி முதல் இணையவழியில் தொடங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.