நீட் நுழைவுத் தேர்வின் நம்பகத்தன்மை?

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் 154 நகரங்களில் 3 ஆயிரத்து 842 மையங்களில் தேர்வு நடந்தது. சுமார் 16 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 90 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 90 சதவீதம் பேர் தேர்வை எழுதினர்.

மாணவி ஜோதி ஸ்ரீ
மாணவி ஜோதி ஸ்ரீ

கொரோனா பாதுபாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது. இம்மாத இறுதியில் நீட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் நம்பகத்தன்மை

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பொதுத்தேர்வுகளின் நம்பகத்தன்மை 99 சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் எந்தவொரு பொதுத்தேர்வும் நேர்மையாக நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வடமாநிலங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் காப்பியடிக்க ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளே உதவி செய்வது பலமுறை நடைபெற்றுள்ளது.

பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடிப்படை அறிவுகூட இல்லாத மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, உண்மையான மாணவருக்குப் பதிலாக வேறு ஒரு மாணவர் தேர்வு எழுத செய்து மோசடி செய்வது ஆகும்.

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான தமிழக மாணவர்கள், வடமாநில தேர்வு மையங்களை தேர்வு செய்திருந்தனர்.

மோதிலால்
மோதிலால்

பொதுத்தேர்வில் நம்பகத்தன்மை மிகுந்த தமிழகத்தில் மட்டுமே நீட் ஆள்மாறாட்ட முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் அதிகம் நடைபெறுவதாகவும் அந்த முறைகேடுகள் கண்டு கொள்ளப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

3 மாணவர்கள் தற்கொலை

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடைபெற்று வந்தபோது எவ்வித குழப்பமும் இல்லை.

ஆனால் நீட் நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தபிறகு மருத்துவப் படிப்பில் சேரும் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கோச்சிங் வகுப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்கும் வசதிபடைத்த மாணவர்களால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவர் ஆதித்யா
மாணவர் ஆதித்யா

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா கடந்த 2017-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டு நீட் தேர்வின்போதும் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்பாக மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ, தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா, திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *