நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற ஆகஸ்ட் 1-ம்தேதி நடைபெறுகிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும், பி.எஸ்.சி. வாழ்வியல் அறிவியல் படிப்புக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை என்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.