108 ஆம்புலன்ஸுக்கு தனி செயலி

108 ஆம்புலன்ஸுக்கு தனி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர், 108 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களை கையாளுவதற்காக தனி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் இருந்து வருகிறது. எவ்வளவு நேரத்தில் வரும் என்பன உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *