மத்திய பட்ஜெட்டுக்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். வரும் பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட்டை பொதுமக்கள் பார்ப்பதற்காக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை www.indiabudget.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பட்ஜெட் தகவல்கள் புதிய செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.