சென்னையில் பஸ்களின் வருகையை அறிய விரைவில் புதிய செயலி

சென்னையில் பஸ்களின் வருகையை அறிய விரைவில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.


சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை பஸ்களின் வருகையை அறிய புதிய செயலியை உருவாக்கும் பணியை போக்குவரத்து கழக அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி அனைத்து பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுபஸ்களின் வருகை, வழித்தடம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். சென்னையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *