தமிழகத்தில் வாகன தகுதிச் சான்று (எப்.சி.) வழங்குவதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் வாகனத்தின் முன், பின், வலது, இடது, முழு வாகனம் என 5 புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் வாகனத்தை இயக்கி, பரிசோதித்த பிறகே எப்.சி. வழங்கப்படும். இதற்காக மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய திட்டம் முதல்முறையாக கோவையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்பட உள்ளது.