குடிநீர் வாரிய நுகர்வோருக்கு புதிய அட்டை வழங்கப்படுகிறது.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் நுகர்வோர்கள், வரி செலுத்துவோர் தங்களுக்கான புதிய நுகர்வோர் அட்டையை அலுவலக வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அனைத்து பணிமனை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நுகர்வோரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.