புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் ஜெனரலாக இருந்த வெ.இறையன்பு புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக பொறுப்பேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளீல் தீவிரம் காட்டி வருகிறார்.

புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு சேலம் மாவட்டம், காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் வெங்கடாச்சலம், பேபி சரோஜா. விவசாய பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற இறையன்பு 1987 -ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *