நந்தம்பாக்கத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம்

நந்தம்பாக்கத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதிதாக கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 800 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மே 10-ம் தேதி புதிய கொரோனா சிகிச்சை மையம் செயல்படத் தொடங்கும் என்று முதல்வர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *