தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவமனை செயல்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு மே 1-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்நோயாளிகள் பிரிவில் புதிதாக 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கொரோனா நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவமனையின் இயக்குநர் ஆர். மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.