புதிய கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் அறிமுகம்

புதிய கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் புனே நகரை சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோவாவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை பரிசோதித்து உற்பத்தி செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. பரிசோதனைகளை நிறைவு செய்து வரும் செப்டம்பரில் புதிய கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *