தமிழகத்துக்கு வருகிறது புதிய புயல்…

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நிவர் புயல் புதுச்சேரி அருகே அண்மையில் கரை கடந்தது. இதனால் வடமாநிலங்கள், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 

இதைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது தமிழக கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்பதால் டிச. 1 முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். 

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *