சென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் தயார் செய்யப்பட்டுள்ளது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து புதிய நீர்த் தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டப்பணிகள் 2013-ல் தொடங்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய நீர்தேக்கம் முழுமையாக தயாராகிவிட்டது. இதற்கு ரூ.380 கோடி செலவு செய்யப்பட்டுல்ளது. 1,485.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சென்னை மாநகருக்கு தினமும் 65 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.