தமிழகத்தில் பழுதடைந்த மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், ஆலைகள் என 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள், ஆலைகளில் மின் மீட்டர்கள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மின் அளவீடு குறைந்து மின் வாரியத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை பொருத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.