முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணம்

முந்தைய கட்டணத்தின் அடிப்படையிலேயே புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீடு வீடாக மின் கணக்கீடு அளவிடப்படவில்லை. முந்தைய மின் கட்டணத்தையே செலுத்தலாம். புதிதாக மின் கணக்கீடு செய்த பிறகு ஏற்கெனவே செலுத்திய தொகையை கழித்துவிட்டு மீதி தொகையை செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.


இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். கொரோனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மின் கட்டண சுமை சுமத்தப்படுகிறது. இரண்டு, இரண்டு மாதங்களுக்கு தனித்தனி கட்டண பில்களை தயாரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.


இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் கூறுகையில், முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது என்று வாதிட்டார்.


இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *