விரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல்

விரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். பொதுமக்கள் மின் கட்டணத்தை நேரடியாகவும் டிஜிட்டல் வழியாகவும் செலுத்தி வருகின்றனர்.

பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் வீட்டு வாசலிலேயே கிரெடிட், டெபிட் கார்டு வாயிலாக மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.

இந்த திட்டம் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கியூ ஆர் கோடு என்ற ரகசிய குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்து மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *