மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் முதல்வரின் தனிப்பிரிவில் புகார்களாக அளிக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அரசு துறைகள் மீதான புகார்களை செல்போன் வாயிலாக பதிவு செய்ய விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புகார் எந்த அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.