ரூ.52,257 கோடியில் 34 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.52,257 கோடியில் 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் 93,935 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தைவானின் பெகாட்ரான் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் செல்போன் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது. தைவானின் எக்ஸ்வேர் நிறுவனம் சார்பில் ரூ.745 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு வன்பொருள் ஆலை தொடங்கப்படுகிறது.
ஜெர்மனியின் பிஏஎஸ்எப் நிறுவனம் சார்பில் ரூ.345 கோடியில் செங்கல்பட்டில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் ஆலை, ஜெர்மனியை சேர்ந்த எய்க்காப் விண்ட் நிறுவனம் சார்பில் ரூ.621 கோடியில் சென்னை அருகே காற்றாலை மின்சக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.