தமிழகத்தில் ரூ.10,000 கோடிக்கு புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடியில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடியில் செல்காம்ப் நிறுவன செல்போன் மின்னேற்றி உற்பத்தி திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் நிறுவன பயிற்சி மையம் உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
திருவள்ளூர் வல்லூர் கிராமத்தில் சரக்குகள் கையாளும் பூங்கா, ஸ்ரீபெரும்புதூரில் ஷெல் நிறுவனத்தின் புயரின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய திட்டங்கள் மூலம் 8,666 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.