ரூ.5,137 கோடியில் 16 புதிய தொழில் திட்டங்கள்

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் ரூ.2,300 கோடியில் அதானி நிறுவனத்தின் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதையும் சேர்த்து தமிழகம் முழுவதும் ரூ.5,137 கோடியில் 16 புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.


இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கையெழுத்தாகின. இந்த 16 புதிய தொழில் திட்டங்களால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தின் பொருளாதாரம் ஊக்கம் பெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் காலத்திலும் தமிழகம், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி மீட்சி பெற்று வருகிறது என்று பல்வேறு புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *