விரைவில் ஏழைகளுக்கு விரிவான காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
புதிய விரிவான காப்பீடு திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் புதிய காப்பீடு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆண்டு வருமான நிர்ணயம், எத்தனை குடும்பங்களை திட்டத்தில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய காப்பீடு திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.