ரவுடிகளை ஒழிக்க விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக டிஜிபி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் ரவு கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஜோசப் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறையில் உள்ள வேலு என்பவர் தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தமிழக டிஜிடி சார்பில் ஐகோர்ட்டில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா எப்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.