டெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் புதிய மாற்றங்கள்

டெபிட், கிரெடிட் கார்டு விதிகளில் புதிய மாற்றங்கள் அமல் செய்யப்பட்டுள்ளன.

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போதும், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. இதை தடுக்க டெபிட், கிரெடிட் கார்டுகளில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளையும் உள்நாட்டில் உள்ள ஏடிஎம் மையங்கள், பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வெளிநாடுகளில் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வங்கியிடம் வேண்டுகோள் விடுத்து அந்த வசதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருந்தால் அந்த கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்கலாம்.

இரு கார்டுகளிலும் குறிப்பிட்ட அளவு வரை செலவு செய்ய அனுமதிக்கும் வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

மொபைல், இன்டர்நெட் சேவை, ஏடிஎம், வாய்ஸ் சேவை ஆகியவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் குறித்த சேவையை 24 மணி நேரமும் பெறும் வசதியை தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாம்.

என்எப்சி வசதி அல்லது கான்டாக்ட்லெஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அந்த சேவையை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இந்த நடைமுறைகள் ப்ரீபெய்ட் கிப்ட் கார்டுகள், மெட்ரோ கார்டுகளுக்கு பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *