ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.
‘காசோலை துண்டிப்பு முறை’ என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான காசோலை பரிவர்த்தனைகள் குறித்து வங்கி நிர்வாகங்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் வங்கிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.