பத்திரப்பதிவு கட்டணத்தில் விரைவில் புதிய கட்டுப்பாடு

பத்திரப்பதிவு நடைமுறையில் இடைத்தரகர்களை ஒழிக்க தமிழக பதிவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.


தற்போது ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் நெட் பேங்கிங் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு சில இடைத்தரகர்கள், ரூ.5,000 வரை கமிஷனாக வசூலிக்கின்றனர்.
இந்த இடைத்தரகர்களை ஒழிக்க பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே பணம் செலுத்தும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று சார்பதிவாளர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *