மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு வருவாய் துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையை பெற நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானது.
தற்போது வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.