ஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில்

ஏப். 24 முதல் தாம்பரம்- நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை- மதுரை, புதுச்சேரி-கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

இதேபோல கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *